Könyv Nachu Koppai M. Karunanidhi

Nachu Koppai

Szerző: M. Karunanidhi
Nyelv: Tamil
Kötés: Puha kötésű
Elérhetőség: Beszállítói készleten
Küldés 9-15 napon belül
3 752 Ft
நான் எழுத ஆசைப்பட்டேன் எழுத ஆரம்பித்தேன். என் முதல் எழுத்துத் தான் இந்த "நச்சுக் கோப்பை "நாடகம். வேல...

Információk a könyvről

Szerző
Nyelv
Tamil
Kötés
Könyv - Puha kötésű
Kiadva
2026
oldal
76
EAN
9788199777439
ISBN
8199777435
Enbook ID
50651679
Súly
116
Méretek
152 x 229 x 4

Teljes leírás

நான் எழுத ஆசைப்பட்டேன் எழுத ஆரம்பித்தேன். என் முதல் எழுத்துத் தான் இந்த "நச்சுக் கோப்பை "நாடகம். வேலூர் திராவிடன் பதிப்பாக நண்பர்கிருட்டினன் இதையும் வெளியிட வேண்டுமென்றார். அவர் பிடிவாதம் வெற்றிப் பெற்றது. அதுதான் இந்த ஏடு. நீண்ட நாட்கள் - ஏன்! எட்டு ஆண்டுகள் உருண்டுவிட்டன இதை எழுதி! உங்கள் அன்புக்கரங்களுக்கு நச்சுக்கோப்பையல்ல; நல்ல கருத்துக்கள் படையலாகட்டும்.

இந்நாட்டு தமிழ்ப்பெரு மக்களுக்கு எழிலும், சுவையும் மிகுந்த இன்பந்தரும் கதைகளும், கட்டுரைகளும் அளித்த மு. கருணாநிதி இந்நாடகத்தையும். தந்துள்ளார்!. அவர் வாழ்க!

"நச்சுக்கோப்பையில்' சொற் சுவையும் கருத்துச் சுவையும் பூத்துக் குலுங்குகிறது.

இன்னும், இந்த நல்லதொரு நாடகத்தை வெளியிட்டுக் கொள்ள உரிமையளித்த தோழர். மு. கருணாநிதி அவர்கட்கு எங்களுடைய மனமுவந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நெஞ்சம் வேகிறதே. இந்தத் தீ! தீ! தீ! இந்தச் சமுதாயக் கோட்டையை கம்பிக் கொள்ளாதா? உபயோகமற்ற சமூகமே! உலுத்துப்போன பிசாசே! கொன்று விட்டாயா பழனியப்பனை? அவன் என்ன தவறு செய்தான்? ஏன் இந்தப் பழிகார வேலை? பள்ளந்தனில் விழும் பழமைச் சமூகமே! சாகப்போகும் சாதிக் கட்டுப்பாடே? பொட்டுப் பூச்சியே? புன்மைத் தேரையே! அழு, இளி,அஞ்சு! குனி- பிதற்று. மனிதரில் நீங்களும் மனிதர். மண்ணன்று! இமை திறந்து பாருங்கள். பழனிப்பன் இறந்தது நியாயமா என்று சொல்லுங்கள். சாந்தா, ஏகாம்பரத்தைக் காதலித்தாள். அவளைச் சமுதாயத்தின் சகுனத்தடை என்று தூற்றினீர்கள். ஏன்? கம்மனாட்டி என்றீர்கள்- வரப் போகும் புயல் உங்களையும் தாக்கு மென்ற எண்ணமில்லாமல்! இது ஒரு உலகம்! இது ஒரு வாழ்வு!

Azok a vásárlók, akik ezt a könyvet megvásárolták, a következőket is megvásárolták

11 531 Ft
14 530 Ft
3 439 Ft